
பொள்ளாச்சி அருகே ஆசிரியை கண்டித்ததால் ஒன்பதாம் வகுப்பு அரசு பள்ளி மாணவிகள் மூன்று பேர் சாணி பவுடர் குடித்து தற்கொலை முயற்சி- பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!
பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. காலாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் நேற்றும் வழக்கம் போல் மாணவ,மாணவிகள் பள்ளிக்கு வந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த ஒன்பதாவது படிக்கும் மூன்று மாணவிகளிடம் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவிகள் காதல் வேலைகளில் ஈடுபட்டு இருப்பதாக கூறி அவரகளை கண்டித்ததாக தெரிகிறது.
இதற்கு மறுப்பு தெரிவித்து மாணவிகள் பேசியபோதும் ஆசிரியை தொடர்ந்து திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த மாணவிகள் பள்ளியின் வெளியே சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இது அறிந்த அக்கம்பக்கத்தினர் மயக்க நிலையில் இருந்த மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
அங்கு மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்கள் அங்கிருந்த ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.